கைவிடப்பட்ட முத்தம்
நகரமெங்கும்
தனித்தலைகிறது ஒரு முத்தம்
அதன் ஈரம் சிவந்திருக்கிறது
மதுக்கோப்பையொன்றில் விழுந்து எழுந்து
துளிகள் சிதறி விரையும் முத்தம்
கண்ணீர் கழுவிய நண்பனின் கன்னத்தில்
விழுந்து அழுகிறது
அதற்கு ஒரு பால்யமுண்டு
மிருதுவான உள்ளங்கை மீது தன்னை பதிக்க
கனவுகளில் விரையும் முத்தம்
உதடுகள் துடிக்கத் தோல்வியுறுகிறது
காதலிகளால் கைவிடப்பட்ட முத்தமது
உலகில் வாழத் தகுதியற்ற அம்முத்தம்
விடிவதற்குள் தன்னை நெருப்பிலிட்டு
பொசுக்கிக் கொள்கிறது
நிகோடின் போர்த்தியிருக்கும் செத்தமுத்தம்
அதிகாலையில் தன்னை அடக்கம் செய்துகொள்கிறது
வெடிப்புற்ற ஊமை உதடுகளின் பிளவில்.
- கணேசகுமாரன்.
நகரமெங்கும்
தனித்தலைகிறது ஒரு முத்தம்
அதன் ஈரம் சிவந்திருக்கிறது
மதுக்கோப்பையொன்றில் விழுந்து எழுந்து
துளிகள் சிதறி விரையும் முத்தம்
கண்ணீர் கழுவிய நண்பனின் கன்னத்தில்
விழுந்து அழுகிறது
அதற்கு ஒரு பால்யமுண்டு
மிருதுவான உள்ளங்கை மீது தன்னை பதிக்க
கனவுகளில் விரையும் முத்தம்
உதடுகள் துடிக்கத் தோல்வியுறுகிறது
காதலிகளால் கைவிடப்பட்ட முத்தமது
உலகில் வாழத் தகுதியற்ற அம்முத்தம்
விடிவதற்குள் தன்னை நெருப்பிலிட்டு
பொசுக்கிக் கொள்கிறது
நிகோடின் போர்த்தியிருக்கும் செத்தமுத்தம்
அதிகாலையில் தன்னை அடக்கம் செய்துகொள்கிறது
வெடிப்புற்ற ஊமை உதடுகளின் பிளவில்.
- கணேசகுமாரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக