சனி, 3 மே, 2014

 
இப்போதே செத்துவிட்டால்
நன்றாக இருக்குமென்றுதான் தோன்றுகிறது

ஒரு மரத்தை அடைந்திருக்கிறேன்
என் கனவு மரம் அது
அதன் கனி ருசிக்கத் தொடங்கியிருக்கிறேன்
சாறு வழிந்து நெஞ்சில் பரவுகிறது
திகட்டவே திகட்டாத ருசி
எச்சில் விழுங்கும் ஒவ்வொரு முறையும்
வாழ்வு என்னைத் தொண்டையில்
முத்தமிடுகிறது
இத்தனை ஈரத் தித்திப்பான முத்தத்தினை
இதுவரை அறிந்ததில்லை

வேறொரு கனவு
வேறொரு மரம்
வேறொரு கனி
வேறொரு ருசி
வேறொரு முத்தம் தேவையில்லை எனக்கு

இந்தக் கனவு கலையுமுன்
மரம் வீழுமுன்
கனி நழுவுமுன்
ருசி மறையுமுன்
முத்தம் உலருமுன் செத்துவிட வேண்டும்
அவ்வளவுதான்.

என் கவலையெல்லாம்
சந்தோஷமாயிருக்கும்போது
சாவது எப்படி என்றுதான்

-கணேசகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக