அதற்கு இப்போது வேறு பெயர்
ஒரு டெடிபியரினைக்
கொலை செய்வதில்
எந்தச் சிரமமுமில்லை உங்களுக்கு
அதை நீங்கள் கொஞ்சியிருக்கலாம்
முத்தமிட்டிருக்கலாம்
அதன் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு
நீங்கள் ஆடிய நடனம்
உங்கள் டைரியில் பதியப்பட்டிருக்கலாம்
கண்ணாமூச்சி விளையாட்டில்
அதனை ஒளித்துவைத்து நீங்கள் தேடியிருக்கலாம்
அதற்கும் உங்களுக்கும் மட்டுமே தெரிந்த
செல்லப்பெயரில் நீங்கள் அழைத்திருக்கலாம்
அதன் முகத்தில் நீங்கள் விழித்திருக்கலாம்
அப்போது
அது சிரிக்கும் சிரிப்பில்
நீங்கள் டெடிபியராகியிருப்பீர்கள்
உயிருடன்தான் இருந்தது
உங்கள் அழைப்பில், தீண்டலில்
அதன்முன் நீங்கள் டெடியான நொடிகளில்...
ஒரு டெடிபியரினைக் கொல்வதற்கு
எவ்விதச் சிரமமில்லை உங்களுக்கு
டெடிபியர் வெறும் பொம்மையென
அறிந்துகொண்ட ஒரு மழைநாளின் மாலையில்
வீசி எறிந்து விட்டீர்கள்.
டெடிபியரின் பெயர் சடலமென்றாகிப் போனது
ஓர் அநாதை பொம்மையின்
அழுகிப்போன சடலம் எங்காவது கண்டால்
உங்களுக்கும் அதற்கும் மட்டும் தெரிந்த
செல்லப்பெயர் கொண்டு அழைத்துப்பாருங்கள்
ஒருவேளை அது உயிர்க்கலாம்.
-கணேசகுமாரன்.
ஒரு டெடிபியரினைக்
கொலை செய்வதில்
எந்தச் சிரமமுமில்லை உங்களுக்கு
அதை நீங்கள் கொஞ்சியிருக்கலாம்
முத்தமிட்டிருக்கலாம்
அதன் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு
நீங்கள் ஆடிய நடனம்
உங்கள் டைரியில் பதியப்பட்டிருக்கலாம்
கண்ணாமூச்சி விளையாட்டில்
அதனை ஒளித்துவைத்து நீங்கள் தேடியிருக்கலாம்
அதற்கும் உங்களுக்கும் மட்டுமே தெரிந்த
செல்லப்பெயரில் நீங்கள் அழைத்திருக்கலாம்
அதன் முகத்தில் நீங்கள் விழித்திருக்கலாம்
அப்போது
அது சிரிக்கும் சிரிப்பில்
நீங்கள் டெடிபியராகியிருப்பீர்கள்
உயிருடன்தான் இருந்தது
உங்கள் அழைப்பில், தீண்டலில்
அதன்முன் நீங்கள் டெடியான நொடிகளில்...
ஒரு டெடிபியரினைக் கொல்வதற்கு
எவ்விதச் சிரமமில்லை உங்களுக்கு
டெடிபியர் வெறும் பொம்மையென
அறிந்துகொண்ட ஒரு மழைநாளின் மாலையில்
வீசி எறிந்து விட்டீர்கள்.
டெடிபியரின் பெயர் சடலமென்றாகிப் போனது
ஓர் அநாதை பொம்மையின்
அழுகிப்போன சடலம் எங்காவது கண்டால்
உங்களுக்கும் அதற்கும் மட்டும் தெரிந்த
செல்லப்பெயர் கொண்டு அழைத்துப்பாருங்கள்
ஒருவேளை அது உயிர்க்கலாம்.
-கணேசகுமாரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக