வெள்ளி, 2 மே, 2014

அன்புக்கும் பேரன்புக்கும் இடையில் நாம் ஒரு கொலை செய்கிறோம்

ஒரு அன்பைக் கைப்பற்றிக்கொள்ளும் பதற்றத்தில்
நாம் ஒரு கொலை செய்கிறோம்

குற்ற உணர்வு ஏதுமின்றி நாம் உணவு உண்ண
கூடவேயிருக்கிறது அன்பு.

அதன் சுண்டுவிரலைப் பிடித்துக்கொண்டு
உறங்கிவிடுகிறோம்.

அத்தனை வலிகளுக்கும் மருந்தென
அன்பினை பூசி மெருகேற்றுகிறோம்

நிகழ்ந்த உண்மையினை மறைக்க
பூசுகிறோம் அன்பின் குரூரத்தில்
மாய வாசனா திரவியங்களை

இத்தனை பாதுகாப்பாய் புன்னகைக்க வழிசெய்யும்
அன்பும் கழுத்தறுபட்டு
ரத்தம் பெருக்கி வீழ
எங்கோ காத்திருக்கிறது உலகின் மிகப் பேரன்பு.

- கணேசகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக